• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தீவகங்களுக்கு பாதுகாப்பான மீன்பிடித்துறைமுகங்கள் செய்து தரப்படும் – இளங்குமரன் உறுதியளிப்பு

இலங்கை


குறிகட்டுவான் மற்றும் நயினாதீவு பகுதிகளில் உள்ள கடற்றொழிலாளர்களின் படகுகள் சேதமின்றி பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் அப்பகுதி கடற்தொழிலாளர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.

குறிகாட்டுவான் மற்றும் நயினாதீவு கடற்தொழிலாளர்களை நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தித்து கலந்துரையாடிய போதே , இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் அப்பகுதி கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நடைமுறை சவால்கள், தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பான துறைமுக நிலைமை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதோடு, தகுந்த தீர்வுகளை விரைவாக பெற்று தருவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் உறுதி அளித்தார்.

Leave a Reply