TamilsGuide

அமெரிக்காவிற்கான கனடிய தூதுவர் பதவி விலகுகின்றார்

அமெரிக்காவுக்கான கனடிய தூதுவர் கிர்ஸ்டன் ஹில்மன் (Kirsten Hillman) பதவியை விட்டு விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 2026ம் ஆண்டில் பதவி விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

வாஷிங்டனில் எட்டரை ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவிற்கான கனடிய தூதுவராக ஹில்மன் கடமையாற்றியுள்ளார்.

பிரதமர் மார்க் கார்னிக்கு (Mark Carney) புதிய ஆண்டில் எனது பணிக்காலத்தை முடித்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளேன் என ஹில்மன் குறிப்பிட்டுள்ளார்.

கனடா–அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தேக்க நிலையில் உள்ள தருணத்தில் இவ்வாறு பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

எதிர்வரும் மாதங்களில் பேச்சுவார்த்தைக் குழுவுக்கு தேவைப்படும் ஆலோசனைகளைத் தொடர்ந்து வழங்கத் தயாராக இருக்கிறேன்.

விரைவில் கனடா திரும்பி எனது அடுத்த கட்ட வாழ்க்கைத் திட்டங்களைப் பகிர்ந்துகொள்வேன் என தெரிவித்துள்ளார்.

2020 மார்ச்சில் அதிகாரப்பூர்வமாக தூதராக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி ஹில்மன் திகழ்கின்றார். அதற்கு முன் 2017 முதல் துணைத் தூதராகவும், 2019-இல் இடைக்கால தூதராகவும் பணியாற்றியுள்ளார்.

கொவிட்-19 எல்லைப் பிரச்சினைகள், சீனாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மைக்கேல் கோவ்ரிக் & மைக்கேல் ஸ்பேவர் விடுதலை உள்ளிட்ட பல சிக்கல்களை அமைதியாகவும் திறம்படவும் கையாண்டவர் ஹில்மன் பாராட்டுக்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  
 

Leave a comment

Comment