TamilsGuide

கயிறு தடக்கி நெடுந்தீவு கடலில் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

நெடுந்தாரகை பயணிகள் படகில் ஏற முயன்ற போது படகு கட்டும் கயிற்றில் தடக்கி கடலுக்குள் வீழ்ந்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று (10) காலை 6.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் தேங்காய் மூட்டையுடன் “நெடுந்தாரகை” பயணிகள் படகில் ஏறுவதற்கு பரராசசிங்கம் பிறேமகுமார் என்பவர் முயற்சித்துள்ளார்.

இதன்போது அவர் படகு கட்டும் கயிற்றில் தடக்கி கடலுக்குள் வீழ்ந்துள்ளார்.

அவரை மீட்க அருகில் நின்றவர்கள் முயற்சியை மேற்கொண்டபோதும் அவரை உயிருடன் மீட்க முடியாதுபோயுள்ளது.

நெடுந்தீவு கிழக்கு, 15 ஆம் வட்டாரம், தொட்டாரம் பகுதியைச் சேர்ந்த பரராசசிங்கம் பிறேமகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment