• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகர் ராஜசேகருக்கு தீவிர சிகிச்சை! ரசிகர்கள் அதிர்ச்சி

சினிமா

பிரபல நடிகர் ராஜசேகர் நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் தற்போது படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அவரது மனைவி ஜீவிதாவும் பிரபல நடிகை தான். மேலும் அவரது இரண்டு மகள்கள் ஷிவானி, ஷிவாத்மிகா ஆகியோரும் தமிழ், தெலுங்கில் பிரபல நடிகைகளாக இருந்து வருகின்றனர்.

தற்போது ராஜசேகர் சர்வானந்த் நடிக்கும் பைக்கர் என்ற படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார். மேலும் விஜய் தேவரகொண்டா - கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தில் அவர் வில்லனாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் ராஜசேகர் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்தில் படுகாயம் அடைந்து இருப்பதாக வரும் தகவல் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.

காலில் அவருக்கு பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டு இருப்பதாகவும், அதற்காக அவருக்கு 2 மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற்று இருக்கிறது.

சிகிச்சைக்கு பிறகு ராஜசேகர் தற்போது ஓய்வில் இருக்கிறார். அதனால் அவர் இன்னும் பல வாரங்களுக்கு ஷூட்டிங்கில் பங்கேற்க கூடாது என மருத்துவர்களும் கூறி இருக்கிறார்களாம்.  
 

Leave a Reply