பராசக்தி வெளியாகி 65 வருடங்கள் கடந்து விட்டன
சினிமா
முதல் படத்திலேயே உச்சம் தொடும் அதிர்ஷ்டம் சினிமாவில் ஒரு சிலருக்குத் தான் கிடைக்கும். அந்த வகையில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான பராசக்தி திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை தமிழ் சினிமாவில் பெற்றுத் தந்தது.
#பராசக்தி - சிவாஜி கணேசன்
பராசக்தி வெளியாகி 65 வருடங்கள் கடந்து விட்டன. ஆனாலும் இந்தப் படத்தையும் சிவாஜி கணேசனின் நடிப்பையும் இதுவரை யாரும் மிஞ்ச முடியவில்லை என்பதுதான் இப்படத்தின் ஹைலைட்.
கிருஷ்ணன்,பஞ்சு இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு கலைஞர் கருணாநிதியின் வசனங்கள் தூணாக அமைந்தன. சிவாஜி அறிமுகமான முதல் படமே அவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட்டாக அமைந்து விட்டது.
பராசக்தி ஏற்படுத்திய தாக்கத்தை இன்றளவும் வேறு எந்தப் படங்களும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் நிதர்சனம்.
ஒரே நாளில் ஹாலிவுட் நடிகர் ஸ்பென்ஸர் டிரசியுடன் ஒப்பிடப்படும் அளவுக்கு சிவாஜி கணேசனின் புகழ் உயர்ந்தது. தமிழ்நாட்டில் 175 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய பராசக்தி வசூலிலும் நல்ல லாபத்தை ஈட்டியது.
குறிப்பாக அந்த கோர்ட் காட்சிகளும், வசனங்களும் மக்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.
தமிழ் சினிமாவின் கண்டிப்பாகப் பார்க்கக் கூடிய படங்களில் பராசக்திக்கு ஒரு தனியான இடமுண்டு.
மொத்தத்தில் முதல் படத்திலேயே சிவாஜி கணேசனுக்கு கிடைத்த அறிமுகம் இன்றளவும் வேறு எந்த நடிகருக்கும் கிடைக்கவில்லை என்பதே உண்மை.
Thanks: Filmi Beat ( news & photo )
நடிகர் திலகம் சிவாஜி ரசிகன்.






















