TamilsGuide

தன்னம்பிக்கை இருந்தால் நிலைத்து நிற்கலாம் – எம்.ஜி.ஆர்

கேள்வி: நடிப்புத் துறையில் நீங்கள் ஈடுபடக் காரணம் என்ன?
எம்.ஜி.ஆர் பதில்: வறுமை
கேள்வி: பலருக்கு உதவிடும் நீங்கள் எப்போதாவது யாரிடமாவது ஏதாவது உதவி பெற்றிருக்கிறீர்களா?
எம்.ஜி.ஆர்: பிறருடைய உதவியினாலேயே வளர்ந்தவன் நான் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.
கேள்வி: நீங்கள் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது?
எம்.ஜி.ஆர்: என் எண்ணப்படி அமைந்த படங்கள் ‘பெற்றால் தான் பிள்ளையா’, ‘என் தங்கை’. குறிப்பாக, பெற்றால் தான் பிள்ளையாவில் நான் போட்ட வேஷம் என்னை ரொம்பவும் கவர்ந்தது.
கேள்வி: இளம் ஹீரோக்களுக்கு தாங்கள் கூறும் அறிவுரை என்ன?
எம்.ஜி.ஆர்: விரைவில் தங்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு போய்விடுமோ என்று அச்சமடையும் சூழ்நிலையில், உள்ளதை வைத்து தன்னம்பிக்கையும் தளரா உழைப்பும் இருப்பின் நிச்சயமாக முன்னேறலாம். நிலைத்து நிற்கலாம்.
1961-ல் ‘நடிகன் குரல்’ இதழில்
வெளிவந்த பேட்டி...
நன்றி தாய் இதழ்! .
 

Leave a comment

Comment