TamilsGuide

லண்டன் விமான நிலையத்தில் நடந்த கொள்ளைச் சம்பவம் - தாமதமான விமானம்

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில், நடந்த கொள்ளைச் சம்பவத்தினால் பல மணி நேரம் பயண இடையூறு ஏற்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து, பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளதுடன் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் ஐந்து பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், 3 வயது சிறுமி உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்றதாக அதிகாரிகளால் தெரிவிக்கப்படுகின்றது.

லண்டனின் புறநகர்ப் பகுதியில் உள்ள டெர்மினல் 3 கேரேஜில், நான்கு ஆண்கள் கொண்ட குழு, ஒரு லிஃப்டில் இருந்த ஒரு பெண்ணின் சூட்கேஸைத் திருடி, எரிச்சலூட்டும் பொருளை அவர் மீது தெளித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, கறுப்பு நிற உடையில் தலையை மூடிய மூன்று இளைஞர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

மேலும், இதன் காரணமாக, பல மணிநேரங்கள் விமானங்கள் தாமதமாகிய நிலையில் பயண இடையூறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.  


 

Leave a comment

Comment