• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கையில் 2,200-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்த இந்திய மருத்துவ குழு

இலங்கை

இலங்கையில் பெய்த கனமழையால் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரிடருக்கு 465 பேர் பலியாகி உள்ளனர். 366 பேர் மாயமாகி இருக்கிறார்கள்.

வெள்ளத்தால் பாதித்த இலங்கைக்கு இந்தியா நிவாரண பொருட்களை அனுப்பியது. மேலும், மீட்புப்பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையும் அனுப்பப்பட்டது. அவர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் மனிதாபிமான உதவியின் ஒரு பகுதியாக பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர சுகாதார உதவிகளை வழங்குவதற்காக இந்தியா ஒரு நடமாடும் மருத்துவமனையையும், 70-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களையும் இலங்கைக்கு அனுப்பி உள்ளது.

இந்திய விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் ஆக்ராவிலிருந்து 73 மருத்துவப் பணியாளர்கள் மற்றும் உபகரணங்களுடன் புறப்பட்டு கொழும்பில் தரை இறங்கியது.

இந்நிலையில், இலங்கை பேரிடர்- கண்டியில் இந்தியா அமைத்த தற்காலிக மருத்துவமனையில் இலங்கை மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 2,200க்கும் மேற்பட்டோருக்கு இந்திய மருத்துவ குழு சிகிச்சை அளித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

Leave a Reply