நேற்று இரவு என்னை பார்க்க எம்ஜிஆர் வந்தாரா ?
சினிமா
மக்கள் திலகத்தின் பெரும் மதிப்பிற்குரிய கலைவாணர் தன் 49 ஆம் வயதில் உடல் நலம் மிகவும் பாதிக்க பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவருடன் அவர் சீடர்கள் காக்கா ராதாகிருஷ்ணன் , டனால் தங்கவேலு ஆகியோர் உடன் இருந்தனர்.
கலைவாணர் ஒருவேளை நான் இல்லாமல் போனால் தம்பி ராமச்சந்திரனை நன்கு கவனித்து கொள்ளுங்கள் ..அவன் மிகவும் நல்லவர் என்று சொல்லி கொண்டே இருக்க.
ஒரு நாள் இரவு மருத்துவ மனைக்கு அவரை நலம் விசாரிக்க தலைவர் போகிறார்...அங்கே மருந்து சாப்பிட்டு விட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார் கலைவாணர்.
வெளியே காத்து இருந்த மேலே சொன்ன இருவரிடமும் நான் வந்து போனதாக சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு தலைவர் புறப்பட.
மறுநாள் விடிந்தது..காலை கடன்களை முடித்த பின் கலைவாணர் இருவரையும் அழைத்து நேற்று இரவு என்னை பார்க்க எம்ஜிஆர் வந்தாரா என்று கேட்க.
தங்கவேலும், ராதா கிருஷ்ணன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு ஆமாம் அண்ணே எப்படி சரியா சொன்னீங்க....என்று கேட்க.
பசங்களா இந்த நாட்டுல வேறு எவர் நான் தூங்கி கொண்டு இருக்கும் போது என் தலையணை கீழே ஒரு பேப்பரில் சுற்றி கட்டு கணக்கில் பணத்தை வைத்து இருக்க போறாங்க...என்று சொல்ல.
வியப்பில் அசந்து போனது அவர்கள் மட்டும் அல்ல நாமும் தானே...
வாழ்க எம்ஜியார் புகழ்.
நன்றி... திரு.நெல்லை மணி அவர்களின் பதிவிலிருந்து........






















