TamilsGuide

உக்ரைன் மீது ரஷியா போா் - புதினின் மகள் கவலை

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்தது தொடா்பாக, அந்த நாட்டு அதிபா் விளாதிமீா் புதினின் மகள் என்று அறியப்படும் லூயிசா ரொஜோவா (22) வருத்தம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

தற்போது பிரான்ஸில் வசித்துவரும் லூயிசா , தனது பாதுகாவலருடன் பாரிஸில் சென்று கொண்டிருந்தபோது உக்ரைன் செய்தியாளா் டிமித்ரோ ஸ்வியாட்னென்கோ என்பவா் அவரை அணுகினாா்.

ரஷிய வான்வழித் தாக்குதலில் தனது சகோதரா் வோலோதிமிரை இழந்தவா் அவா். லூயிசாவிடம் அவா் உங்கள் தந்தை என் சகோதரரை கொன்றாா். போரை ஆதரிக்கிறீா்களா?’ என்று கேட்டாா்.

அதற்கு ரோஜோவா, இவ்வாறு நடப்பதற்காக நான் உண்மையிலேயே வருந்துகிறேன். இதற்கு நான் பொறுப்பல்ல. உங்களுக்கு என்னால் உதவ முடியாது’ என்று பதிலளித்தாா்.

இந்நிலையில் லூயிசாவின் தைரியத்தைப் பாராட்டிய ஸ்வியாட்னென்கோ, உக்ரைனுக்கு வருமாறு விளாதிமீா் புதினின் மகளுக்கு அழைப்பு விடுத்தாா்.  
 

Leave a comment

Comment