இந்தியாவில் வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள பாகா பகுதி கடற்கரையில் இயங்கி வந்த இரவு விடுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலியானவர்கள் அனைவரும் விடுதி ஊழியர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர்.
விடுதியில் தங்கி இருந்த சுற்றுலா பயணிகள் 4 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணி்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீ விபத்து சமையல் அறை பகுதியில் நிகழ்ந்துள்ளது.
சிலிண்டர் வெடிப்பு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


