பிரான்ஸில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் புகுந்த கார்- 10 பேர் உயிரிழப்பு
பிரான்ஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட குவாடலூப் தீவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது. அங்குள்ள தேவாலயத்திற்கு எதிரே உள்ள ஷோல்ச்சர் சதுக்கத்தில் இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது கூட்டத்திற்குள் கார் ஒன்று அதிவேகமாக புகுந்தது. இதனால் மக்கள் அலறியடித்து ஓடினார்கள். கூட்டத்திற்குள் கார் புகுந்ததில் 10 பேர் பலியானார்கள். 9 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்தனர்.
காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரை ஓட்டிய டிரைவர் குறித்து எந்த விவரமும் வெளியாகவில்லை.






















