TamilsGuide

பட்டத்து ராணி பாடலை யார் பாடுவதில் ஏற்பட்ட சண்டை.. எல்ஆர் ஈஸ்வரி பகிர்ந்த அந்த உண்மை..!

எல் ஆர் ஈஸ்வரி பிறந்தநாள் சிறப்பு பதிவு!
பட்டத்து ராணி' பாடலை யார் பாடுவதில் ஏற்பட்ட சண்டை.. எல்ஆர் ஈஸ்வரி
பகிர்ந்த அந்த உண்மை..!
கண்ணதாசன் வரிகளில், எம்.எஸ் விஸ்வநாதன் இசையில், எல் ஆர் ஈஸ்வரியின் வசீகரிக்கும் குரலில் வெளியான பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.
எல் ஆர் ஈஸ்வரி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அவரது அம்மன் பாடல்கள். அம்மன் பாடல்கள் என்றாலே
எல்.ஆர் ஈஸ்வரிதான் என்ற அளவுக்கு தனது தெய்வீக குரலால் மக்களை கவர்ந்திருப்பார்.
தமிழ் சினிமாவில் கோரஸ் பாடகியாக எஸ்.வி வெங்கடராமன் இசையில் அறிமுகப்படுத்தப்பட்டவர் எல் ஆர் ஈஸ்வரி. இவரது தாயும் கோரஸ் பாடகியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதன் முதலில் பாடகியாக எல் ஆர் ஈஸ்வரியை அறிமுகப்படுத்தியது
கே.வி மஹாதேவன். அதன் பின் ‘பாசமலர்’ படத்தில்எம் எஸ் விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையில் எல் ஆர் ஈஸ்வரி பாடிய “வாராயோ தோழி வாராயோ” பாடல் இன்றும் மக்கள் மத்தியில் கேட்கப்படுகிறது.
காதல், காமெடி, ஹம்மிங், சோகம், தெய்வீகம், என அனைத்து உணர்வுகளையும் கனகச்சிதமாக தனது குரலால் பாடி அசத்தும் திறமை கொண்டவர் எல்.ஆர் ஈஸ்வரி. பல முன்னணி பாடகர்களுடன் சேர்ந்து பாடியிருக்கிறார் எல்ஆர் ஈஸ்வரி.
1969 ஆம் ஆண்டு சிவி ஸ்ரீதர் இயக்கத்தில் எம் எஸ் விஸ்வநாதன் இசையில் சிவாஜிகணேசன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சிவந்தமண்’. இந்த படத்தில் இடம்பெற்ற “பட்டத்து ராணி பார்க்கும் பார்வை..” பாடல் மாபெரும் ஹிட் கொடுத்தது.
கண்ணதாசன் வரிகளில், எம்.எஸ் விஸ்வநாதன் இசையில், எல் ஆர் ஈஸ்வரியின் வசீகரிக்கும் குரலில் வெளியான பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.
இந்த பாடலில் எல் ஆர் ஈஸ்வரிதான் பாட வேண்டும், அவரால் தான் அந்த பாடலை பாடமுடியும் என்று சண்டைபோட்டு எம்.எஸ்வி... எல்.ஆர் ஈஸ்வரியை பாடவைத்தார்
இந்த படத்தை இயக்கிய சிவி ஸ்ரீதர்,
பட்டது ராணி பாடலை சுசீலா பாடுவார் என்று எம்.எஸ்.வி இடம் கூறியுள்ளார். உடனே எம்எஸ்வி இந்த பாடலுக்கு பொருத்தமான குரல் எல்.ஆர் ஈஸ்வரியுடையது தான் என்று கூறியுள்ளார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த சி.வி ஸ்ரீதர் சுசீலா தான் பாடவேண்டும் என்று கூற, அதற்கு எம்.எஸ்.வி சரி சுசீலா பாடுவார் என்றால் நான் டியூனை மாத்திவிடுகிறேன், என்னால் இந்த டியூனை கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு எல்ஆர் ஈஸ்வரி இரவு 1 மணிக்கு ஸ்டுடியோவில் வாய்ஸில் பாடும்போது சிவி ஸ்ரீதர் எழுந்து வெளியே சென்றுவிட்டார்.
அப்போது ஏன் ஸ்ரீதர் அண்ணா என்ன சொல்கிறார் என்று எல்ஆர் ஈஸ்வரி கேட்டபோது, எம்எஸ்வி ஹம்மிங்கில் தொடங்கி பாடலை எவ்வாறு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதை அடிவயிற்றில் இருந்து எடுக்க வேண்டும், வயிறு சுலுக்கிவிடும் என்று கூற, எல்ஆர் ஈஸ்வரி அதெல்லாம் நான் பாடிவிடுவேன் என்று ஒரே டேக்கில் முழு பாடலையும் பாடி ஆச்சரியப்படுத்திவிட்டார்.
பதிவு - பிரசாந்த்!
 

 

Leave a comment

Comment