TamilsGuide

சிவாஜி குறித்து பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் பகிர்ந்த சம்பவம்

சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த தமிழ் பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் சிவாஜி குறித்து ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். பட்டிமன்றங்களில் தனது நகைச்சுவையான பேச்சால் பலரையும் கவர்ந்துள்ள பேராசிரியர் ஞானசம்பந்தம் ஒருமுறை, கமலா தியேட்டர் அதிபரின் இல்ல திருமணத்திற்கு சென்றுள்ளார்.

இந்த திருமணத்தில், சிவாஜி கணேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்த நிலையில், அங்கு திருமண மேடையில், பேசுவது என்று முடிவு செய்யப்பட்டு சிவாஜியிடம் கூறப்பட்டுள்ளது. இதை கேட்ட அவர், என்னயா திருமண வீட்டிலும் பேச்சா என்று கேட்டுள்ளார். இதை கேட்ட ஏற்பாட்டாளர் இல்ல அய்யா 15 நிமிடம் தான் பேசுவார் என்று சொல்ல, பேராசிரியர் ஞானசம்பந்தத்தை அழைத்த சிவாஜி கணேசன், தனது பையில் இருந்து கடிகாரத்தை எடுத்து 15 நிமிடம் தான் பேசனும் சரியா என்று கூறியுள்ளார்.

சிவாஜியின் பேச்சுக்கு சரி என்று சொல்லிவிட்டு மேடை ஏறிய பேராசிரியர் ஞானசம்பந்தம், நான் என் அப்பாவிடம் இருந்து பெற்ற தமிழை விட உங்களிடம் இருந்து பெற்ற தமிழ் தான் அதிகம் என்று சொல்லி பேச்சை தொடங்கி, கட்டபொம்மன், மனோகரா உள்ளிட்ட படங்களில் சிவாஜியின் வசனங்களை பேசாமல், அவர் நடித்த நகைச்சுவை படங்களை பற்றி பேச தொடங்கியுள்ளார். 15 நிமிடம் ஆனவுடன், விழா ஏற்பாட்டாளர் வந்து முடித்துக்கொள்ளலாமா என்று சிவாஜியிடம் கேட்க, என்ன அழகா பேசிக்கிட்டு இருக்கான் பேசாம உட்காருயா என்று கூறியுள்ளார் சிவாஜி.

திருமண வீட்டில் பேச்சு வேண்டாம் என்று முதலில் யோசித்த சிவாஜி கணேசன், பேராசிரியர் ஞானசம்பந்தம் பேசிய நகைச்சுவை கலந்த பேச்சின் காரணமாக அவர் அனுமதித்தை நேரத்தை விடவும் அதிகமாக கேட்டு ரசித்துள்ளார் என்று பேராசிரியர் ஞானசம்பந்தம் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 🌹

Ganesh Pandian

Leave a comment

Comment