இயற்கை அனர்த்தங்களினால் ஏற்பட்ட அழிவுகள் காரணமாக மீள் கட்டமைப்பு உதவிகள் கோரியுள்ள இலங்கைக்கு நிதி வழங்கியுள்ள கனடிய வர்த்தக இணையர்கள் கணேசன் சுகுமார் - குலா செல்லத்துரை
இலங்கையின் இயற்கை அனர்த்தங்களினால் ஏற்பட்ட பாதிப்புக்களால் மீள் கட்டமைப்பு உதவிகள் கோரியுள்ள இலங்கை அரசிற்கு உடனடியாக நிதி வழங்கியுள்ள கனடாவின் வர்த்தகத்துறை இணையர்கள் கணேசன் சுகுமார் மற்றும் குலா செல்லத்துரை ஆகியோரை கனடிய தமிழ்ச் சமூகம் பாராட்டி மகிழ்கின்றது. எங்கு உதவிகள் தேவைப்படுகின்றனவோ அங்கெல்லாம் உடனடியாக பிரசன்னமாகி உதவிக் கரம் நீட்டுவதற்கு பின்னிற்காக இவ்விரு இணையர்களையும் கனடா உதயன் ஆசிரிய பீடம் மற்றும் இலங்கை -தமிழ்நாடு மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள செய்தியாளர்கள்- கட்டுரையாளர்கள் குழாம் ஆகியன தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றன


