மலையகத்தில் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட நுவரெலியா கந்தப்பளை பகுதியில் உள்ள மக்களை சந்திப்பதற்காக நேற்று பெருந்தோட்டம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமுக அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அங்கு சென்றிருந்தார்.
கந்தப்பளை பகுதியில் மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களையும் உறவுகளை இழந்த குடும்பங்களையும் அமைச்சர் சந்தித்து கலந்துரையாடினார்.
பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பிரதி அமைச்சர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
கந்தப்பளை பகுதியில் மாத்திரம் 800பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் அறியகிடைத்தது.
மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ந்தும் இதுபோன்ற வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள் இவர்களுக்கான பாதுகாப்பான ஒரு இடத்தை பெற்றுக் கொடுப்பது தான் எமது முதற்கட்ட நடவடிக்கையாக இருக்கிறது .
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் உத்தியோக பூர்வ அறிக்கையின் பிரகாரம் பாதுகாப்பான பகுதியில் இவர்களுக்கான வீடமைப்பு திட்டங்கள் எமது அரசாங்கத்தின் ஊடாக கட்டாயம் அமைத்து கொடுக்கப்படும் நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தினை முன்வைத்து அனர்த்த அரசியலில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள்.
இறந்து கிடக்கும் உடலங்கள் மேல் ஏரி அரசியல் பேசுகிறார்கள் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு எதிர்கட்சியினர் ஒத்துழைப்பு வழங்கவில்லை பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு கிடையாது.
இந்த சந்தர்ப்பத்தில் இதனை வைத்து மக்களை குழப்ப முயற்சிக்கிறார்கள்.
கொவிட் காலபாபகுதியில் முஸ்லிம் மக்களுடைய ஜனாசக்களை எரிப்பதற்கு தடையாக இருந்தவர்களோடு இன்று வடக்கு மற்றும் கிழக்கு மலையகம் ஆகிய பகுதிகளில் அமைச்சர்கலாக இருந்தவர்கள் கைகோர்த்திருக்கிறார்கள்.
இது அரசியல் செய்வதற்கான காலம் கிடையாது முழு நாட்டு மக்களும் இன்று உடமைகளையும் உறவுகளையும் இழந்து தவிக்கிறார்கள் ஆகவே பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் சென்று அநாகரிகமான அரிசியல் செய்வதை நிறுத்திக்கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டார்.


