TamilsGuide

ரயில் பருவச் சீட்டுகளை பேருந்துகளில் பயன்படுத்தி பயணிக்கலாம்

நாட்டில் நிலவும் பேரிடர் சூழ்நிலையால் மாதாந்திர ரயில் பருவ பயணச் சீட்டுகளை வைத்திருக்கும் பயணிகள், இலங்கை போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

அதன்படி, அதி சொகுசு சேவைகள் தவிர்த்து, அனைத்து சாதாரண SLTB பேருந்துகளிலும் பயணிகள் தங்கள் செல்லுபடியாகும் ரயில் பருவ பயணச் சீட்டுகளை பயன்படுத்தி பயணிக்க முடியும் என்று இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

இந்த ஏற்பாடு குறித்து அனைத்து பேருந்து ஊழியர்களுக்கும் தொடர்புடைய குழுக்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக SLTB மேலும் தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment