TamilsGuide

அமெரிக்காவில் தேடப்படும் இந்தியர் - 50 ஆயிரம் டாலர்கள் வெகுமதி அறிவிப்பு

அமெரிக்காவில் தேடப்படும் இந்தியர் தொடர்பில் தகவல் வழங்கினால் வெகுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நசீர் ஹமீது (38 வயது) என்பவர் அமெரிக்காவின் நியூஜெர்சியில் வசித்து வந்தார்.

இவர் கடந்த 2017-ம் ஆண்டு தனது மனைவி சசிகலா மற்றும் 6 வயது மகன் அனிசை கொன்றுவிட்டு தலைமறைவானார்.

இதுகுறித்து அமெரிக்கா புலனாய்வு அமைப்பு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. சந்தேக நபர்  இந்தியாவில் பதுங்கி இருப்பதாக துப்பு கிடைத்தது.

இந்த நிலையில் இந்தியாவில் பதுங்கி இருக்கும் நசீர் ஹமீது குறித்து துப்புக்கொடுத்தால் 50 ஆயிரம் டாலர்கள் வெகுமதி அளிப்பதாக அமெரிக்கா புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது.
 

Leave a comment

Comment