அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தமது தொடர்ச்சியான ஆதரவைப் பிரதிபலிக்கும் வகையில், 27 பேர் கொண்ட ஜப்பான் அனர்த்த நிவாரண மருத்துவக் குழு, இன்று இலங்கையை வந்தடைந்துள்ளது.
வைத்தியர்கள், மருத்துவ நிபுணர்கள், நிவாரண அதிகாரிகள் மற்றும் மீட்பு நிபுணர்களைக் கொண்ட இந்தக் குழுவினர், தேசிய நிறுவனங்களுடன்
ஒருங்கிணைந்து, தரை மட்டத்தில் அத்தியாவசிய மருத்துவ உதவிகளை வழகவுள்ளனர்.
மேலும், 04 பேர் கொண்ட ஜப்பான் மருத்துவக் குழு ஏற்கனவே இலங்கைக்கு அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக வந்திருந்ததுடன், மொத்தமாக 31 பேர் கொண்ட ஜப்பான் மருத்துவக் குழு தற்போது நாட்டில் மனிதாபிமான நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


