TamilsGuide

உயிரிழந்த விமானியின் பூதவுடலுக்கு , ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி

வென்னப்புவ, லுணுவில பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் உத்தியோகபூர்வ பணிகளுக்காக மேற்கொண்ட பல பயணங்களில் குரூப் கப்டன் நிர்மால் சியம்பலாபிட்டிய விமானியாக இணைந்து செயற்பட்டிருந்தார்.

அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் இராணுவப் பிரதானி சவேந்திர சில்வா உள்ளிட்டவர்களும் இன்று (04) முற்பகல் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பூதவுடல் மீதான இறுதிச் சடங்குகள் தெஹிவளை – கல்கிஸ்ஸை பொது மயானத்தில் இன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிக்கொண்டிருந்த போது வென்னப்புவ, லுணுவில பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
 

Leave a comment

Comment