TamilsGuide

சூர்யாவுக்கு சரவணன் என்ற பெயர் இதனால் தான் வைத்தேன் - உண்மையை உடைத்த சிவகுமார்

இன்று காலை வயது மூப்பின் காரணமாக பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மறைந்த ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஏ.வி.எம். சரவணன் உடலுக்குநடிகர்கள் சிவக்குமார் மற்றும் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிவக்குமார், "என்னுடைய சொந்த பெயர் பழனிசாமி. அதை சிவகுமார் என மாற்றியது சரவணன் சார் தான். இதன் காரணமாக தான் எனது சூர்யாவுக்கு நான் சரவணன் என பெயர் வைத்தேன்" என்று தெரிவித்தார். 
 

Leave a comment

Comment