இலங்கை அரசு சீன அரசிடமிருந்து 1 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி மற்றும் 10 மில்லியன் யுவான் பெறுமதியான அவசர நிவாரணப் பொருட்களை நன்கொடையாகப் பெற்றுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.
மேலதிகமாக, சீன செஞ்சிலுவை சங்கம் இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு 100,000 அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
அதே நேரத்தில் இலங்கையில் உள்ள சீன நிறுவனங்கள் மற்றும் குடிமக்கள் தொடர்ச்சியான நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவாக மேலும் 10 மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளனர்.
இந்தப் பங்களிப்பை இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜென்ஹோங் முறையாகக் கையளித்தார்.
மேலும் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹெராத் அதை ஏற்றுக்கொண்டார்.
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட சமீபத்திய பாதகமான வானிலைக்குப் பின்னர் சீனா அளித்த உறுதியான ஆதரவிற்காக, இலங்கையின் நீண்டகால நண்பர் என்று வர்ணித்த அமைச்சர் ஹெராத், சீனாவிற்கு அரசாங்கத்தின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.


