அன்பே வா படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயம் அது!! ஊட்டி நோக்கி சென்று கொண்டிருக்கிறது எம்.ஜி.ஆரின் கார்.
காரில் எம்.ஜி.ஆர்.--திருமதி எம்.ஜி.ஆர்--சபாபதி- ஆகியோர் பயணித்தபடி!! ஓட்டுனர் -ராமசாமி!
கூனூர் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது காரை நிறுத்தச் சொல்கிறார் எம்.ஜி.ஆர்?--காரணம்--சற்று தொலைவில்---
ஒரு இஸ்லாமிய வயோதிகர் மிகவும் தள்ளாடியபடி சென்று கொண்டிருக்கிறார்!!கையில் விறகு வெட்டி!!! அவருக்கு அருகில் காரை நிறுத்தச் சொன்ன எம்.ஜி.ஆர்--அந்த வயோதிகரை காரில் ஏற்றிக் கொண்டு அவர் எங்கு போக விரும்புகிறார் என்று கேட்கிறார்!!
அந்தப் பெரியவரோ எம்.ஜி.ஆரை சற்று உற்றுப் பார்த்தபடி காரில் ஏறிக் கொள்கிறார்.
காரில் ஏறிய அந்த இஸ்லாமிய முதியவர் எதையோ முணுமுணுத்தபடி இருக்கிறார்!!
அவரிடம் எம்.ஜி.ஆர் கேட்கிறார் --இந்த வயதிலும் விறகு வெட்டிப் பிழைக்கணுமா?/ அவர் பதில் சொல்கிறார்--எனக்கு பிள்ளை குட்டிகள் இருக்கிறார்களே??--
எம்.ஜி.ஆரும் விடுவதாயில்லை??
ஏன் அவங்க உழைச்சு உங்களைக் காப்பாத்தலாமே??
வயோதிகர் சொல்கிறார்-அவங்களுக்கும் பிள்ளைக் குட்டி இருக்காங்களே???
அவர் இறங்க வேண்டிய இடம் வந்ததும் இறங்கிச் சென்று விடுகிறார்??
எம்.ஜி.ஆர்--தன்னுடன் வந்தவர்களைப் பார்த்து---என்னைத் தெரியாதவர்களே இருக்க முடியாதுன்னு சொன்னீங்களே?? இப்போ பார்த்தீங்களா-??-அந்தப் பெரியவருக்கு என்னை அடையாளம் தெரியலே?? ஆக நான் ஜெயிச்சுட்டேன் என்று சொன்னவர் காரைக் கிளப்ப சொல்கிறார்.
ஆனாலும்-- கார் கிளம்பாமல் இருக்கவே--காரணம் கேட்கிறார் எம்.ஜி.ஆர்!!
இல்லைங்க! அந்தப் பெரியவர் என்னிடம் சற்றுக் காத்திருக்க சொல்லி ஜாடை காட்டிவிட்டுப் போயிருக்கிறார்--அதோ அவரே திரும்பி வருகிறார் பாருங்க என்று சொல்ல---அந்தப் பெரியவரோ--
மூச்சிரைக்க காரை நோக்கி வருகிறார்--கையில் சில பழங்கள்!!--எம்.ஜி.ஆரிடம் உரையாடுகிறார்---
ஐயா! உங்க படங்களை நிறையப் பார்த்துருக்கேன்?
இன்னும் கொஞ்ச நாள் தான், நான் இருப்பேன் ஆனால் என் பிள்ளைங்களையும் வருங்காலத்துல என் பேரப் பிள்ளைகளையும் உங்க படத்தப் பார்த்து உங்களைப் போல இருக்கணும்ன்னு கேட்டுகிட்டிருக்கேன்! அவங்க எனக்குக் கொடுத்த வாக்கை நிச்சயம் காப்பாத்துவாங்க!!
காரில்-உங்க கூடப் பேசறதுக்கு பதிலா உங்களுக்காக அல்லா கிட்டே தொழுதுகிட்டு வந்தேன் ?/ இந்தப் பழங்களை ஏத்துக்குங்க??--சொல்லி விட்டு--பழங்களை எம்.ஜி.ஆரிடம் கொடுத்து விட்டு செல்கிறார்!!
எதற்கும் கலங்காத எம்.ஜி.ஆர்.இப்போது கண்கள் பனிக்கிறார்!--அப்போது திருமதி ஜானகி--அவரிடம்--
ஏங்க!! அவருக்கு ஏதாவது பணம் கொடுத்திருக்கலாமே? என்று கேட்க--பதில் தருகிறார் எம்.ஜி.ஆர்?/--
இல்லே ஜானு!! இந்த வயசிலும் பிள்ளைகளை எதிர்பார்க்காமல் தன் உழைப்பில் வாழ நினைக்கும் தன்மானக்காரர் அவர்!! அவருக்கு பணம் கொடுத்தால் அவர் வருத்தப் படுவார். மேலும் அது-- நான் --அவருடைய உழைப்புக்கு செய்யும் அவமரியாதை?? மொத்தத்தில் அவர் ஒரு பெரிய கேரக்டர்!!!--சொல்லிக் கொண்டே வந்தவர் தன் மனைவியிடம் குழந்தை போல் சொல்கிறார்---
இந்தப் பழங்களை பத்திரமாக வை!! யாருக்கும் தரமாட்டேன் நான் மட்டுமே அனைத்தையும் சாப்பிடப் போகிறேன்???--ஆக---
ஏதும் கொடுக்காமலேயே ஒருவரது குணத்துக்கேற்ற கௌரவம் தருகிறார் எம்.ஜி.ஆர்!!!--இப்படி--அவர்---
துல்லியமாக ஒவ்வொன்றையும் கவனித்ததாலோ
வல்லியமாக வாழ்கிறார் இன்னமும் நம் நெஞ்சில்????
Prashantha Kumar


