TamilsGuide

டயகம கிழக்கு வீதி முற்றாக சேதம் – சுமார் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் பெரும் அவதி

நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் டயகம கிழக்கு தோட்டத்திற்கு செல்லும் வீதி முற்றாக உடைந்துள்ளமையினால் அங்கு வாழும் சுமார் 5000 மேற்பட்ட மக்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர்.

கடந்த 26 ம் திகதி பெய்த கடும் மழை காரணமாக டயகம ஆறு பெருக்கெடுத்து குறித்த வீதி முற்றாக சேதமடைந்துள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் குறித்த வீதியினை பயன்படுத்தி தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர் குறித்த வீதியில் தற்போது வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதனால் பொது போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதனால் மக்கள் சுமார் 6 கிலோ மீற்றர் தூரம் நடந்த செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அத்தியவசிய பொருட்கள் கொண்டு முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் வைத்தியசாலைக்கும் செல்பவர்களும் பாடசாலைக்கும் செல்லும் மாணவர்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் அதிகமாக விவசாயம் செய்யும் விவசாயிகள் தங்களது உற்பத்திகளை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை இந்த வீதியின் ஓரத்தில் உள்ள ஒரு சில குடியிருப்புக்களும் வெடிப்புக்குள்ளாகியுள்ளன.

எனவே இந்த வீதியினை சீர் செய்து தருமாறு பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
 

Leave a comment

Comment