'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்.ஜி.ஆர் மகன்' மற்றும் 'டி.எஸ்.பி' போன்ற திரைப்படங்களை இயக்கிய பொன்ராம் தற்போது 'கொம்புசீவி' என்ற படத்தை இயக்கியுள்ளார். கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக உள்ள இந்தப் படத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, முதல் பாடல் வெளியானது.
இந்த நிலையில், 'கொம்புசீவி' படத்தின் 'வஸ்தாரா' பாடல் வெளியாகி உள்ளது. சூப்பர் சுப்பு வரிகளில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்பாடலை விஷ்ணு பிரியாவுடன் இணைந்து யுவனும் பாடியுள்ளார்.


