டித்வா சூறாவளியின் பேரழிவைத் தொடர்ந்து, இலங்கைக்கான மனிதாபிமான ஆதரவை இந்தியா தீவிரப்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஆப்ரேஷன் சாகர் பந்துவின் கீழ் தற்காலிக கள மருத்துவமனை, 70க்கும் மேற்பட்ட மருத்துவ மற்றும் துணைப் பணியாளர்கள் மற்றும் மீட்பு வாகனங்களுடன் கூடிய இந்திய விமானப் படையின் C-17 போக்குவரத்து விமானம் கொழும்பில் நேற்று (03) தரையிறங்கியது.
ஆக்ராவிலிருந்து 73 மருத்துவ நிபுணர்கள் மற்றும் உபகரணங்களுடன் கூடிய C-17 விமானம் மாலையில் கொழும்பில் தரையிறங்கியது.
இதனை தனது எக்ஸ் கணக்கில் தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கையின் வெள்ள நிவாரண முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், இந்திய விமானப்படையின் Mi-17 ஹெலிகொப்டர்கள் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண (HADR) நடவடிக்கைகளைத் தொடர்ந்தன.


