சமீபத்தில் நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவுவதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து மனிதாபிமான நான்காவது உதவி நிவாரணங்கள் அடங்கிய ஐக்கிய அரபு இராச்சிய விமானப்படைக்கு சொந்தமான C -17 விமானம் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்து .
மீட்பு நடவடிக்கைகளுக்காக விசேட பயிற்சி பெற்ற 53 அபுதாபி சிவில் பாதுகாப்புப் படை வீரர்கள், புதைக்கப்பட்ட இடங்களில் மனித சடலங்களை தேடும் திறன் கொண்ட மோப்ப நாய்கள் நாய்கள், அவற்றைக் கொண்டு செல்லும் குளிரூட்டப்பட்ட வாகனங்கள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் பல வாகனங்கள் இந்த விமானத்தில் இருந்தன.
அவர்களை வரவேற்க இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் காலித் நாசர் அல் அமேரி, வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் மற்றும் முப்படை அதிகாரிகள் குழுவினரும் வருகைதந்திருந்தனர்.


