• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திருமணம்‌ ஆன புதிதில்‌, கொஞ்ச காலத்துக்குக்‌ கணவன்‌ மட்டுமே சந்தோஷமடைகிறான்‌.

சினிமா

திருமணம்‌ ஆன புதிதில்‌, கொஞ்ச காலத்துக்குக்‌ கணவன்‌ மட்டுமே சந்தோஷமடைகிறான்‌.
உடம்பில்‌ இருந்த வெறியும்‌ சூடும்‌ காமக்‌ கலப்பில்‌ இவனைப்‌ பலவீனமாக்கி
விடுகின்றன.
ஒரே உடலில்‌ அவன்‌ தொடர்ந்து உறவு கொள்வதால்‌ நாளாக நாளாக அவனது
பலவீனம்‌ மறைந்து பலசாலியாக விடுகிறான்‌.
மனைவியின்‌ உடம்பில்‌ சேமிக்கப்பட்டிருநத வெறிவெள்ளம்‌, அவனைப்‌ பலவீனமாக்கிச்‌ சீக்கிரம்‌ திருப்தியுறச்‌ செய்துவிடுகிறது.
ஒரே தம்பதிகள்‌ நீடித்து வாழ்வதன்‌ மூலம்‌, உணர்ச்சிக்‌ கலப்பில்‌ சமகால
போகத்திற்கு வந்து விடுகிறார்கள்‌.
கணவனின்‌ உடம்பிலிருந்து சுக்லெமும்‌, மனைவியின்‌ உடம்பிலிருந்து
சுரதமும்‌ வெளியாகும்‌ நேரம்‌ ஒரே நேரமாகயிருநதால்‌ அது சமகால போகம்‌
என்றழைக்கப்படும்‌.
அந்த சமகால போகத்தில்‌ இருவர்‌ உடம்பும்‌ பலமடைகின்றன.
மழைத்‌ தண்ணீர்‌ சாலை வழியாக ஏரியில்‌ விழும்‌ போது, ஏரியிலுள்ள மீன்‌
அந்தத தண்ணீர்‌ வழியாகச்‌ சாலைக்கு வருவது போல்‌, சுகலெத்தின்‌ ஜீவ
அணுக்கள்‌ மனைவியின்‌ உடம்பிலும்‌, சுரத்தின்‌ ஜீவ அணுக்கள்‌ கணவனின்‌
உடம்பிலும்‌ மாறி மாறிப்‌ புகுந்து கொள்கின்றன.

ஒரே தம்பதிகள்‌ நீண்ட நாள்‌ வாழ்வதன்‌ மூலமே இந்தச்‌ சமகால போகம்‌
சாத்தியமாகிறது.
ஒருவர்‌ மீது ஒருவருக்குள்ள பிடிப்பு அதிகமாகிறது.
நோய்‌ நொடியில்லாத ஆரோக்கியமான குழந்தைகள்‌ பிறக்கின்றன.
தாய்‌ - தந்தை மீது பாசத்தோடு அவை வளர்கின்றன.
அங்கு ஒரு மகிழ்ச்சிகரமான இல்லம்‌ உதயமாகிறது.
அத்தகைய, இல்லங்களின்‌ மீது ஒரு ஆரோக்கியமான நாடு உருவாகிறது.
ஆகவேதான்‌ இந்து தர்மம்‌ இல்லறத்தை வலியுறுத்திற்று.
இல்லறத்தில்‌ உடல்‌ உறவு ஒரு பகுதியே.
கண்ணதாசன்!
Prashantha Kumar

Leave a Reply