அனுபவிக்க தெரியாத வயசு, இந்த வெற்றி ஏன் வந்துச்சுனு பயமா இருக்கும் -நளினி
சினிமா
அனுபவிக்க தெரியாத வயசு, இந்த வெற்றி ஏன் வந்துச்சுனு பயமா இருக்கும்; முதல் ஹிட் படம் பற்றி நளினி சொன்ன உண்மை!
சின்னத்திரையில் ‘கிருஷ்ணதாசி’, ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’, ‘கோலங்கள்’ போன்ற தொடர்களில் நடித்து, தமிழ் மக்களின் மனதில் தனது தனிப்பட்ட இடத்தை உறுதி செய்துள்ளார்.
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நளினி, தனது அரிய நடிப்பு திறனாலும், பார்வையாளர்களின் மனதை வெல்லும் தன்மையாலும் தொடர்ச்சியாக சாதனை படைத்துள்ளார்.
நளினியின் நடிப்பு வாழ்க்கை குழந்தை பருவத்தில் துவங்கியது. நடிகை மற்றும் நடன ஆசிரியர்கள் திருமூர்த்தி மற்றும் பிரேமா ஆகியோரின் மகளாக பிறந்த நளினி, படிப்பு மற்றும் நடன பயிற்சியுடன் வளர்ந்திருந்த போது, சினிமா துறையுடன் உடனே இணைந்தார்.
திரைப்பட அறிமுகம் மற்றும் வெற்றிகள்
1983 ஆம் ஆண்டு டி.ராஜேந்தரின் இயக்கத்தில் வெளிவந்த ‘உயிருள்ளவரை உஷா’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நளினி, அகலமான கண்கள், சுருண்ட முடி, முத்து சிரிப்பு ஆகியவற்றால் ரசிகர்களை ஈர்த்தார். அந்த படம் நூறு நாட்கள் ஓடி, நளினியின் மார்க்கெட்டையும் விரைவில் உயர்த்தியது.
அடுத்ததாக, ‘நூறாவது நாள்’, ‘வீட்டுக்கு ஒரு கண்ணகி’, ‘24 மணி நேரம் பிள்ளை நிலா’, ‘பாலைவன ரோஜாக்கள்’, ‘யார்’ உள்ளிட்ட படங்களில் தனது அபாரமான நடிப்பு திறனை நளினி வெளிப்படுத்தினார். அமைதியான முகம், அச்சம், காதல், கோபம், சிரிப்பு, வலி ஆகிய அனைத்தையும் தனது நடிப்பில் காட்டி, மக்கள் மனதில் நிலையான இடம் பெற்றார்.
விவாகம் மற்றும் குடும்ப வாழ்க்கை
10 ஆண்டுகள் பிசியாக நடித்த நளினி, 1987ம் ஆண்டு நடிகர் ராமராஜன் உடன் காதலில் மயங்கிய பின்னர், எம்.ஜி.ஆர். முன்னிலையில் திருமணம் செய்தார். அவர்களுக்கு அருணா மற்றும் அருண் என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தாலும், 2000ம் ஆண்டு கருத்து வேறுபாடுகளின் காரணமாக நளினி ராமராஜனிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.
வில்லி முதல் அம்மா வேடங்கள் வரை
விவாகரத்துக்குப் பிறகு, நளினி ஜெயம், சுக்ரன், ஜித்தன், லண்டன், தில்லாலங்கடி, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் வில்லியாகவும், அம்மாவாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.
சின்னத்திரையில் ‘கிருஷ்ணதாசி’, ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’, ‘கோலங்கள்’ போன்ற தொடர்களில் நடித்து, தமிழ் மக்களின் மனதில் தனது தனிப்பட்ட இடத்தை உறுதி செய்துள்ளார். தொடர்ந்து ‘கல்யாண பரிசு’, ‘மோதலும் காதலும்’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
ஒரு நேர்காணலில், தனது முதல் ஹீரோயின் படமான ‘உயிருள்ளவரை உஷா’ பற்றி பேசுகையில், நளினி கூறியுள்ளார்:
"அந்த படத்தை நடித்த சமயத்தில் எனக்கு எதுவும் தெரியாது. ஏன் என்னை இது பேர் பார்க்கிறார்கள் என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். அப்போது அதை அனுபவிக்க எனக்கு தெரியவில்லை. இப்போது அந்த படத்தை பாத்தால் மிகவும் வெட்கமாக இருக்கும். இன்னும் நன்கு நடித்திருக்கலாம் என்று தோணும்."
நளினி தனது நடிப்பு வரலாற்றிலும், குடும்ப வாழ்க்கையிலும், சின்னத்திரை உலகிலும் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக துவங்கிய பயணம் இன்று பல பரிமாணங்களில் வளர்ந்து, தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகையாக உயர்ந்துள்ளார்.
தமிழச்சி கயல்விழி






















