மனைவி மீது பயம்... முத்தம் கொடுக்க 30 டேக் எடுத்த இளம் நடிகர்
சினிமா
மனைவி மீது பயம்... முத்தம் கொடுக்க 30 டேக் எடுத்த இளம் நடிகர்; கஸ்தூரி இதுவரை சொல்லாத அனுபவம்
முத்தம் கொடுக்க 30 டேக் எடுத்த இளம் நடிகர் குறித்து நடிகை கஸ்தூரி நேர்காணல் ஒன்றில் மனம் திறந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் கமல், பிரபு, விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானார். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய சினிமாக்களில் தனி இடத்தைப் பிடித்து ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். தற்போது, சினிமாக்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், ஒரு பாடலுக்கு நடனமாடுவது என்று இருந்து வருகிறார்.
அதேபோல், டிவி சீரியல்களில் நடிப்பது வெப் சீரிஸ்களில் நடிப்பது என்று இப்போதும் பிஸியாகவே இருக்கிறார். அதே நேரத்தீல், சோசியல் மீடியாவில் கஸ்தூரி ஆக்டிவாக இருக்கிறார். நடிகை கஸ்தூரி சமூக ஊடகங்களில் சினிமா, அரசியல், சமூகம் என எல்லா விஷயங்கள் பற்றியும் வெளிப்படையாக தைரியாக தனது கருத்துகளை முன் வைத்து வருகிறார். கஸ்தூரி 50 வயதை கடந்து இருந்தாலும், 1990-களில் தமிழ் சினிமாக்களில் இருந்த அதே இளமையுடன் இப்போவும் தன்னை வெளிப்படுத்தி வருகிறார்.
நடிகை கஸ்தூரி குறித்து பல விமர்சனங்கள் சுற்றி வருகின்றனர். இருந்தாலும், அவர் அதை எதையும் கண்டுகொள்வதில்லை. இந்நிலையில், நடிகை கஸ்தூரி முத்தம் கொடுக்க 30 டேக் எடுத்த நடிகர் குறித்து சாய் வித் சித்ரா நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அவர் பேசியதாவது, “நான் தயாரித்த சினிமாவில் ஒரு இளம் நடிகர் நடித்தார். அந்த நடிகருக்கு ஒரு முத்தக்காட்சி இருந்தது. அதாவது, ஹீரோயின் பாய் என்று சொல்லிவிட்டு செல்லும் பொழுது உதட்டில் முத்தம் கொடுக்க வேண்டும்.
இன்று பிரதீப் ரங்கநாதன் நாய்க்கு கூட லிப் கிஸ் கொடுக்கிறார். அந்த அளவுக்கு இன்னைக்கு ஈஸியாக செய்துவிடுகிறார்கள். ஆனால், அந்த இளம் நடிகர் தன் மனைவி பார்த்துவிடுவாரோ என்ற பயத்தில் டேக் மேலே டேக் எடுக்கிறார். இரவு 12 மணி வரை தான் எனக்கு லோகேஷன் தந்தாங்க. அந்த நடிகர் 11 மணி வரை டேக் எடுத்தார். அதன்பின்னர் ஒரு வழியாக ஆங்கிலை மாற்றி அந்த காட்சியை முடித்தோம். ஆனால், அது எல்லாம் இப்போது இல்லை எவ்வளவு ஈஸியாக முடிந்துவிடுகிறது.
’சந்திர லேகா’ படம் அப்போது எப்படி எடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால், இப்போது ‘பாகுபலி’ படம் ரொம்ப ஈஸியாக எடுத்துவிடலாம். ஹீரோயின் முகம் சரியில்லை என்றால் ஏ.ஐ மூலம் மாற்றிவிடுகிறார்கள்.
இதுக்கு மேல ஈஸியாச்சு என்றால் எங்களுக்கு எல்லாம் வேலையை இருக்காது. நடிகர் சந்தானம் உழைப்பின் மொத்த உருவம்” என்றார். இதற்கு ‘இ.பி.கோ.302’ படத்தின் நடிகர் தான் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழச்சி கயல்விழி





















