முதல் கலர் படம், நைட்டி உடை, டான்ஸ் மாஸ்டர் இல்லாம தானே ஆடிய நடிகை; 'அனுபவம் புதுமை' ஞாபகம் இருக்கா?
’அனுபவம் புதுமை’ பாடல் குறித்து நடிகை ராஜஸ்ரீ மனம் திறந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
1959-ம் ஆண்டு வெளியாக 'காதல் பரிசு’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஸ்ரீதர். அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர் சிவாஜி ஆகியோரை வைத்து அதிக படங்களை இயக்காத இயக்குனரான ஸ்ரீதர், புதுமுகங்களை வைத்தே பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இந்த வகையில் ஸ்ரீதர் இயக்கத்தில் கடந்த 1964-ம் ஆண்டு வெளியான படம் தான் ’காதலிக்க நேரமில்லை’.
பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் ரவிச்சந்திரன் நாயகனாக அறிமுகமான இந்த படத்தில் முத்துராமன், காஞ்சனா, ராஜாஸ்ரீ, சச்சு, நாகேஷ், பாலையா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் – டி.கே.ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து இசையமைத்த இந்த படத்திற்கு, கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்தார். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.
அந்த வகையில், ‘’அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்’’ என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த பாடல் குறித்து நடிகை ராஜஸ்ரீ மனம் திறந்துள்ளார். அவர் கூறியதாவது, ”காதலிக்க நேரமில்லை திரைப்படத்திற்கு நிறைய ரசிகர்கள் இருந்தார்கள். எனக்கு அதுதான் முதல் கலர் படம். ’அனுபவம் புதுமை’ பாடலின் போது யாரு என்ன டிரஸ் கொடுக்கப் போகிறார்களோ தெரியவில்லை என்று காத்துக் கொண்டிருந்தோம்.
மேக்கப் மேன், அசிஸ்டண்ட் டிரைக்டர் எல்லாம் வருவார்கள் அவர்களிம் இன்னைக்கு என்ன டயலாக் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் டையலாக் எதும் இல்லமா சாங் எடுக்கப் போகிறார்கள் என்றார்கள். யாருக்கூட சாங் என்று கேட்டதும் உங்களுக்கு என்ற தனி சாங் என்றார்கள். டான்ஸ் மாஸ்டர் யாரு என்று கேட்டதற்கு டான்ஸ் மாஸ்டர் யாரும் இல்லை என்று சொன்னார்கள்.எனக்கு குழப்பமாக இருந்தது டான்ஸ் மாஸ்டரும் இல்லை ஹீரோவும் இல்லை என்ன பண்றது என்று சொல்லிவிட்டு உட்கார்ந்து மேக்கப் எல்லாம் போட்டுவிட்டேன்.
டிரஸ் என்ன வரப்போகிறது என்று காத்துக் கொண்டிருந்தேன். ஒரு நைட்டியே தூக்கிக் கொண்டு வந்தார்கள். அதை போட்டுக் கிட்டு வரச் சொன்னார்கள். அப்படி எடுத்த பாடல் தான் ‘அனுபவம்’ புதுமை பாடல். அந்த பாடலுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்” என்றார்.
தமிழச்சி கயல்விழி


