TamilsGuide

குழந்தை வருகையை அறிவித்த பிரித்தானிய தன்பாலின வீராங்கனை

இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனையான டேனி வையட்-ஹாட்ஜ், தனது துணையுடன் இணைந்து குழந்தை வருகையை அறிவித்துள்ளார்.

கடந்த 2024ஆம் ஆண்டு இங்கிலாந்து வீராங்கனை டேனி வையட்-ஹாட்ஜ் (Danni Wyatt-Hodge), தன்பாலின ஈர்ப்பு பெண்ணான ஜார்ஜியா வை மணந்தார். Danni Wyatt-Hodge/Georgia Hodge

கால்பந்து ஏஜென்ட் ஆன ஜார்ஜியாவுடன் 2019ஆம் ஆண்டில் இருந்து டேனி வையட்-ஹாட்ஜ் (34) டேட்டிங் செய்து வந்தார்.

பின்னர் லண்டனின் செல்ஸி ஓல்டு டவுன் ஹாலில் இவர்களது திருமணம் நடந்தது. 

அதில் தங்கள் சிறிய வையட்-ஹாட்ஜ் வருகிறார் என்றும், விரைவில் பெண் குழந்தையை பார்க்கலாம் என்பதால் மனநிறைவாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

மேலும், டேனி ஸ்கேனிங் புகைப்படத்தை காட்டும் படத்தையும் அதில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
 

Leave a comment

Comment