டொராண்டோவில் இன்று இரவு இரண்டு முதல் நான்கு சென்றி மீற்றர் அளவுக்கு பனி பெய்யக்கூடும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த பனிப்பொழிவு, வாரத்தின் குளிர்ச்சியான தொடக்கத்துக்கு பின் வருகிறது.
இன்று பகல் அதிகபட்ச வெப்பநிலை –1°C ஆக இருக்கும் என்றும், காற்றின் வேகத்தால் –12°C போல உணரப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இரவு வெப்பநிலை –5°C வரை குறையும். வாரத்தின் மீதிப் பகுதியிலும் மேகமூட்டமும் லேசான பனிப்பொழிவும் காணப்படும் நிலையில், வெப்பநிலை பனி உறையும் நிலையைச் சுற்றியே இருக்கும்.
இதுவரை டொராண்டோ அல்லது அதன் சுற்றுவட்டப் பகுதிகளுக்கு எந்தவித வானிலை எச்சரிக்கைகளும் பிறப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


