இலங்கை முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவுகளால் ஏற்பட்ட உயிர் இழப்பு மற்றும் பெருமளவிலான சேதங்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
தனது இரங்கல் செய்தியில் அவர்,
மனித உயிரிழப்புகள் மற்றும் பரவலான சேதங்களுக்கு வருத்தம் தெரிவித்தார்.
இந்த கடினமான காலகட்டத்தில் ரஷ்யா இலங்கையுடன் துணை நிற்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு தனது அனுதாபங்களையும் ஆதரவையும் தெரிவிக்குமாறு ஜனாதிபதி திசாநாயக்கவை புட்டின் கேட்டுக்கொண்டார்.
அதே நேரத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் – என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளை எதிர்கொண்ட இலங்கையில் இபெரிய அளவிலான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் தொடர்ந்து வரும் நிலையில் ரஷ்ய ஜனாதிபதியின் இந்த செய்தி வந்துள்ளது.


