பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) இந்த வாரம் தனது நான்காவது அரசு பயணமாக சீனாவுக்குச் செல்லவுள்ளார்.
உலகளாவிய வர்த்தக கொந்தளிப்பான காலகட்டத்தில், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவை நம்பி, ஐரோப்பா பெய்ஜிங்கிலிருந்து வரும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சமநிலைப்படுத்த முயற்சிக்கும் நிலையில் இந்த பயணம் அமைந்துள்ளது.
கடந்த காலங்களில் சீனாவை கையாள்வதில் ஒரு வலுவான ஐரோப்பிய முன்னணியை முன்னிறுத்த மக்ரோன் முயன்றார்.
அதே நேரத்தில் வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர உறவுகளை சோதிக்கும் பெய்ஜிங்கின் வளர்ந்து வரும் உறுதிப்பாட்டை பகைத்துக் கொள்ளாமல் அவதானமாக இருந்தார் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் புதன்கிழமை (03) பெய்ஜிங்கிற்கு விஜயம் மேற்கொள்ளும் மக்ரோன் வியாழக்கிழமை (04) தலைநகரில் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கைச் சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.
அதேநேரம், பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் ஜெர்மன் ஜனாதிபதி பிரீட்ரிக் மெர்ஸும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.


