TamilsGuide

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியம் உதவி

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து உதவிகளை ஏற்றிய விமானம் இன்று காலை நாட்டை வந்தடைந்ததுள்ளது

உணவு மற்றும் கூடாரங்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிப் பொருட்கள் இந்த நன்கொடையில் அடங்கும்.

உதவிப் பொருட்களை, கொழும்பில் உள்ள ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் Rashed Ali Al Mazrouei உத்தியோகபூர்வமாக கையளித்தார். அவற்றை வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் (மத்திய கிழக்கு) செவ்வந்தி டி சில்வா, மேஜர் ஜெனரல் சுமேத விஜேகோன் மற்றும் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரியின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி கெப்டன் தமிந்த ரம்புக்வெல்ல ஆகியோர் அவற்றைப் பொறுப்பேற்றுள்ளனர்.
 

Leave a comment

Comment