TamilsGuide

பாடசாலைகள் மீள திறப்பது குறித்து முக்கிய அறிவிப்பு

டிசம்பர் 16 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் குறித்த முடிவில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ
தெரிவித்துள்ளார்.

இருப்பினும், நிலைமை மறுபரிசீலனை செய்யப்பட்டு திகதியில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.

Leave a comment

Comment