சீனாவின் ஷாண்டொங் (Shandong) வட்டாரத்தில் உள்ள உணவகத்தில் வழங்கப்பட்ட குழம்பில் எரிபொருள் கலக்கப்பட்டதால் 11 பேர் அவதிக்குள்ளாயினர்.
இச்சம்பவம் (Shandong) வட்டாரத்தில் உள்ள உணவகத்தில் கடந்த வாரம் நடந்தது.
உணவகத்திற்குச் சாப்பிடச் சென்றவர்கள் வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் 10 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் அந்தச் சம்பவம் குறித்து உணவகத்திடம் தகவல் கொடுத்தனர். உணவில் எந்தக் குறையும் இல்லை என்று நிரூபிக்க உணவகத்தின் மேலாளர் குழம்பைச் சுவைத்த நிலையில் அதையடுத்து அவரும் நோய்வாய்ப்பட்டார்.
இதனையடுத்து தற்போது அந்த உணவகத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன


