நடிகர் தனுஷ், ராஞ்சனா திரைப்படம் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார்.
அந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது, அதில் இருந்தே தனுஷிற்கு பாலிவுட்டில் பெரிய ஓபனிங் இருக்கிறது. இப்போது ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ்-கீர்த்தி ஜோடியாக நடிக்க தேரே இஷ்க் மே படம் தயாராகியுள்ளது.
இந்த படத்தில் தனுஷ் விமான ஓட்டியாக நடித்துள்ளார்.
கடந்த நவம்பர் 28ம் தேதி இந்த தேரே இஷ்க் மே படம் வெளியாகி இருந்தது. படத்திற்கு விமர்சனங்கள் நல்ல முறையில் வர பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் அமோகமாக வந்து கொண்டிருக்கிறது.
ரூ. 85 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படம் 4 நாள் முடிவில் ரூ. 80 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.


