சென்னை வடபழனியில் Fanly எனும் செயலியின் அறிமுக விழா நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், உலக செஸ் சாம்பியன்ஷிப் குகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்,
"மூளை (அறிவு) கம்மியாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன். மூளை அதிகமாக இருந்தால், நான் இயக்குநர்களை எல்லாம் தொல்லை செய்ய ஆரம்பித்திருப்பேன். அதனால் மூளை கம்மியாக இருப்பதே நல்லதுதான். என்னை கொண்டாடும் ரசிகர்கள் எனக்கு வேண்டாம். தங்கள் பெற்றோரையும், கடவுளையுமே அவர்கள் கொண்டாட வேண்டும். என்னிடம் நண்பனாக, குடும்பமாக பழகக்கூடிய ரசிகர்கள் இருக்கவேண்டும் என்பதுதான் எனது ஆசை.
அதனால்தான் நான் அனைவரையும் 'ஃபிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்' என சொல்லிக்கொண்டே இருக்கிறேன். நான் என் ரசிகர்களுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பேன். இப்போதெல்லாம் சமூக வலைதளங்களில் கவனம் பெறுவதற்காகவே நிறைய வதந்திகளை பரப்புகின்றனர்" என தெரிவித்தார்.
தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.


