TamilsGuide

எம்.ஜி.ஆர் ஆட்சியில் அவரது அண்ணன் சக்ரபாணிக்கு ஏதாவது பதவி கொடுக்கப்பட்டதா? 

" எம்.ஜி.ஆர் தனிக்கட்சி ஆரம்பிக்கும்போது எப்போதாவது தேவைப்பட்டால் தனது அண்ணன் சக்ரபாணியிடம் ஆலோசனை கேட்பதை வழக்கமாக வைத்திருந்தார். ஆட்சி அமைத்த பிறகு அதிகாரிகள் மட்டத்தில் தனது ஆலோசனைகளை முடித்துக்கொண்டார்.

தனது உறவினர்கள் ஆட்சியில் தலையிடக் கூடாது என்று எம்.ஜி.ஆர் நினைத்தார். 'எனது பெயரை 'எனது உறவினர்’ என்று சொல்லிக்கொண்டு யாராவது பயன்படுத்தினால் அதற்கு முக்கியத்துவம் தரவேண்டாம்’ என்று நாளிதழ்களில் எம்.ஜி.ஆர் விளம்பரமே கொடுத்தார். தலைமைச் செயலகத்தில் அதனை ஒட்டவும் சொன்னார்.

எம்.ஜி.ஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது நடந்த 1984 சட்டமன்றத் தேர்தலில் சில இடங்களில் அ.தி.மு.கவுக்கு ஆதரவாக சக்ரபாணி பிரசாரம் செய்தார். அ.தி.மு.க வீரப்பன் அணியாகவும் ஜெயலலிதா அணியாகவும் பிரிந்து மோதிக்கொண்டு இருந்த நேரம் அது. 'எனது தம்பி மிக நல்ல நோக்கத்துக்காக இந்தக் கட்சியை ஆரம்பித்தார். அந்த நோக்கத்தை யாரும் சிதைத்துவிடக் கூடாது’ என்று அறிவுரை சொல்லி வந்தார் ! "

- கழுகார் பதில்கள் .
 

Leave a comment

Comment