TamilsGuide

மக்களோடு மக்களாக வேட்டியை மடித்து கட்டியபடி வெள்ளத்தில் இறங்கிய எம்ஜிஆர்...

முன்னாள் தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கனமழை காரணமாக கோவை நீலகிரி சேலம் உள்ளிட்ட பகுதிகளை நீரில் மூழ்கடித்த 1978ம் ஆண்டு நிகழ்ந்த வெள்ளப்பெருக்கில் மக்கள் சிக்கிய பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்து உதவிகளை வழங்கினார்.

அப்போது அவருடன் இருந்த முன்னாள் அமைச்சர் செ.அரங்கநாயகம் அவர்கள் இது குறித்து கூறுகிறார்.

அன்றைக்கு செல்வ சிந்தாமணி குளத்தின் கரையும், ஒரு பக்க மதகும் உடைந்ததனால் ஏற்பட்ட வெள்ளம் பக்கத்தில் சென்ற பிரதான தார்ச்சாலையை மூழ்கடித்து, அடுத்ததாக இருந்த செட்டிவீதி மற்றும் சுண்டக்காமுத்தூர் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்திருந்தது.

மக்களோடு மக்களாக வேட்டியை மடித்து கட்டியபடி வெள்ளத்தில் இறங்கி நடந்தபடி மக்களை சந்தித்தார் எம்ஜிஆர் அப்போது அவரது காலில் ‌ஏதோ முள்குத்திவிட்டது. அவர் காலில் செருப்பில்லை. அதனால் கால்கள் சிவந்திருந்தது. மக்களையும், வெள்ளத்தில் தத்தளித்த குடியிருப்புகளையும் பார்த்த எம்ஜிஆர் செருப்பை காரிலேயே விட்டுவிட்டு வந்திருந்தது அப்போதுதான் தெரிந்தது.

அப்படியே தொடர்ந்து நடந்த எம்ஜிஆர் கரை உடைந்த பகுதியில் ஒரு மதகு கட்டி அதில் திறக்கப்படும் நீர் அங்கிருந்த வாய்க்கால் மூலம் உக்கடம் பெரியகுளத்திற்கு செல்லும்படியும், அதே வழியில் ஒரு பாலம் தடுப்புச் சுவர் கட்டுமாறும் உடனே எம்ஜிஆர் உத்திரவு பிறப்பித்தார். தொடர்ந்து புதிய மதகும், தடுப்புச்சுவரும் ஏற்படுத்தப்பட்டது. அப்போது கட்டப்பட்ட அந்த மதகுக்கு எம்ஜிஆர் நினைவாக "எம்ஜிஆர் மதகு" என்றே இன்றளவும் மக்கள் சொல்கிறார்கள்!’

Aiyappa Bas

Leave a comment

Comment