முல்லைத்தீவு, நாயாறு பிரதான பாலம் வெள்ளப்பெருக்கு காரணமாக முழுமையாக உடைந்துள்ளது.
இதனால், குறித்த வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
பாலம் உடைந்ததன் காரணமாக முல்லைத்தீவிலிருந்து மணலாறு பகுதிக்கு, முல்லைத்தீவிலிருந்து திருகோணமலைக்கு, முல்லைத்தீவிலிருந்து கோக்கிலாய் பகுதிக்குமான போக்குவரத்து நடவடிக்கைகள் அனைத்தும் ஸ்தம்பித்துள்ளதாக அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.


