TamilsGuide

சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டத்தில் 75 பேர் உயிரிழப்பு

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 75 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 62 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 2691 குடும்பங்களை சேர்ந்த 12304 பேர் இந்த மோசமான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 1914 குடும்பங்களை சேர்ந்த 8654 பேர் பாதுகாப்பான 61 தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள், உணவு மற்றும் பிற அடிப்படை வசதிகள் வழங்கி வருவதாகவும், மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் தாங்கள் உள்ள பகுதிகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், நுவரெலியா நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளவர்கள் நிலைமை சீராகும் வரை பாதுகாப்பான இடங்களில் தங்கியிருப்பது அவசியம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment