கனடா அரசு, சர்வதேச பயணிகளுக்கான விசா செயல்முறையை எளிமைப்படுத்தவும், வேகமாக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் புதிய டிஜிட்டல் விசா அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் முதல் பைலட் நாடாக மொராக்கோ தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மொராக்கோ பயணிகள், இனி தங்கள் விசாவை மின்னணு வடிவில் பெற முடியும்.
பாரம்பரிய காகித ஆவணங்கள் அல்லது தூதரகம், தூதரக அலுவலகங்களுக்கு செல்வது தேவையில்லை.
விசா, பாதுகாப்பான டிஜிட்டல் தளத்தில் சேமிக்கப்படும். பயணிகள் தங்கள் ஆவணங்களை எளிதில் நிர்வகிக்க முடியும்.
ஆரம்ப கட்டத்தில், ஏற்கனவே கனடா விசா பெற்றுள்ள சிலர், பாஸ்போர்ட் ஸ்டிக்கருடன் சேர்த்து டிஜிட்டல் நகலையும் பெறுவார்கள்.
அரசின் நோக்கம்
கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகம் (IRCC), பயணிகளின் உண்மையான அனுபவங்களைப் பதிவு செய்து, அமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த பைலட் திட்டத்தை தொடங்கியுள்ளது.
இது, பேப்பர் வேலை குறைத்து, நேரத்தை சேமித்து, பிழைகள் மற்றும் தாமதங்களைத் தவிர்ப்பதை உறுதி செய்யும்.
மொராக்கோவின் முக்கியத்துவம்
2025 முதல் பாதியில், 1,835 மொராக்கோ குடிமக்கள் கனடா குடியுரிமை பெற்றுள்ளனர்.
இது, ஆப்பிரிக்காவில் புதிய குடியுரிமை பெற்றவர்களில் 7 சதவீதம் ஆகும்.
பிரான்ஸ் மொழி பேசும் புலம்பெயர் மக்கள், குறிப்பாக கியூபெக் மற்றும் ஒன்ராறியோவில், மொராக்கோ சமூகங்கள் வலுவாக உள்ளதால், கனடா-மொராக்கோ உறவுகள் மேலும் வலுப்பெறுகின்றன.
இந்த டிஜிட்டல் விசா அமைப்பு, உலகளாவிய குடிவரவு மற்றும் பயண முறைகளில் முழுமையான டிஜிட்டல் மாற்றத்திற்கான முக்கிய படியாக கருதப்படுகிறது.
மொராக்கோவில் வெற்றிகரமாக செயல்பட்டால், இது உலகளாவிய அளவில் நடைமுறைக்கு வரும் வாய்ப்பு அதிகம்.


