TamilsGuide

இந்தியாவில் மிகவும் பணக்கார நடிகை 

இந்தியாவில் மிகவும் பணக்கார நடிகை யார் என்பது குறித்து சமீபத்தில் தகவல்கள் வெளிவந்தன. அந்த நடிகையின் உத்தேச சொத்து மதிப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தி திரையுலகில் சீனியர் நடிகையாக இருக்கும் ஜூஹி சாவ்லாதான் இந்தியாவின் மிகவும் பணக்கார நடிகையாக உள்ளார். இவருக்கு சுமார் 7,990 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், அவர் தீபிகா படுகோன், ஆலியா பட், ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகளை விட அதிக சொத்துக்களைக் கொண்ட இந்தியாவின் பணக்கார நடிகையாக திகழ்கிறார்..

நடிகை ஜூஹி சாவ்லாவுக்கு பெரும்பாலான வருமானம் திரைத்துறைக்கு வெளியே இருந்துதான் வந்து கொண்டிருக்கிறது..

ஜூஹி சாவ்லா நடிகையாக இருந்தாலும், அவருக்கு செல்வம் அவரது கணவர் ஜெய் மேத்தா மற்றும் தொழில் பார்ட்னர் ஷாருக் கான் ஆகியோருடன் சேர்ந்து அவர் உருவாக்கிய வலுவான வணிக சாம்ராஜ்யத்தின் மூலம் வருகிறது

.இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளராக ஜூஹி சாவ்லா உள்ளார். இந்த அணியை அவர் தனது கணவர் ஜெய் மேத்தா மற்றும் ஷாருக் கான் ஆகியோருடன் இணைந்து நிர்வகிக்கிறார்.

ஜூஹி சாவ்லா, தனது நண்பர் ஷாருக் கானுடன் இணைந்து, திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் குரூப் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு இணை நிறுவனர்/பங்குதாரராக உள்ளார்..

இதுபோன்ற காரணங்களால் ஜூஹியின் சொத்து மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது.

Murugesan N

Leave a comment

Comment