TamilsGuide

யாழ் திருநெல்வேலியில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டவன் போதைப்பொருள் வியாபாரி நதியாவின் கணவனே!!

யாழ் திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் அற்புதாஸ் கடைக்கு முன் வெட்டிக் கொலை செய்யப்பட்டவன் தோழர் அல்லது நைசன் என அழைக்கப்படும் நேசராசா ரஜீவ் (35) என தெரியவருகின்றது.

குறித்த போதைப்பொரு்ள் வியாபாரியின் மனைவியான நதியாவே முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரியாவாள். இவளது 3வது புருசனே வெட்டிக் கொலை செய்யப்பட்டவனாவான்.

இவனும் இவனது மனைவியும் சேர்ந்து போதைப்பொருள் விற்பனை செய்தமையை தட்டிக் கேட்ட சிலரை பொலிசாரின் உதவியுடன் இவர்கள் சிறைக்கு அனுப்பியுள்ளார்கள் என இவனது கொலை தொடர்பான தகவல்களை சேகரிக்கச் சென்றவர்களுக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றார்கள்.

யாழ் கொக்குவில் ரயில் நிலையத்திற்கு அருகில் வசிக்கும் இவனது மனைவியும் இவனும் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரம் செய்வதாகவும் தெரியவருகின்றது.

Leave a comment

Comment