TamilsGuide

மட்டக்களப்பு பிரபல ஆலயத்துள் புகுந்த வெள்ளம்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு சித்தாண்டி சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தினுள் வெள்ளம் புகுந்துள்ளது.

சீரற்ற காலநிலையால் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டம் பெருதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக மண்முனை பாலத்தின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

பாலத்திற்கு முன்னால் உள்ள வீதியில் வெள்ளநீர் பாய்ந்து ஓடுவதினால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.     
 

Leave a comment

Comment