TamilsGuide

வடக்கில் தீவிரமாகும் மழை - கிளிநொச்சியில் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில்

 கிளிநொச்சியில் குளங்கள் வான் பாய்கின்றன மக்கள் இடப்பெயர்வு, தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளில் உள்ள அனைத்து குளங்களும் வான் பாய்கின்றன.

அத்தோடுகிளிநொச்சி மேற்கு பகுதியில் உள்ள குடமுருட்டி குளம் மாத்திரம் இன்று(28) மாலை வரையான தகவலின் படி வான் பாய்கின்றது .

இதன் காரணமாக தாழ் நிலப்பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தங்கியுள்ளனர். வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தமையால் மக்கள் தொடர்ந்தும் இடமபெயர்ந்து வருகின்றனர்.   
 

Leave a comment

Comment