TamilsGuide

நடிகர் சிவகுமாருக்கு மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் சிவகுமார். இவர் 1965-ம் ஆண்டு வெளியான 'காக்கும் கரங்கள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். 1967-ம் ஆண்டு வெளியான 'கந்தன் கருணை' திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை பெற்று தந்தது.

இதனை தொடர்ந்து நடிகர் சிவகுமார் கடைசியாக 2001-ம் ஆண்டு வெளியான 'பூவெல்லாம் உன் வாசம்' படத்தில் நடித்திருந்தார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது நடிப்பை நிறுத்திவிட்டு சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்த நிலையில், தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக் கழகம் சார்பில் நடிகர் சிவகுமார், ஓவியர் சந்துரு ஆகியோருக்கு மதிப்புமிக்க டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் நடிகர் சிவகுமாருக்கு மதிப்புறு முனைவர் பட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 
 

Leave a comment

Comment